அஜீத் நடித்த மங்காத்தா படத்தைத் தொடர்ந்து கார்த்திக்கை வைத்து பிரியாணி என்றொரு படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. சகுனி படத்தில் கார்த்தி நடித்து வந்தபோது அவரிடம் கதை சொல்லி ஓ.கே செய்த அவர், அதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படத்தை அவர் முடித்து வரும்வரை காத்திருந்து இப்போதுதான் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வைக்க நான்கு மாதமாக நாயகி தேடி வந்தார் வெங்கட்பிரபு. இவர் கேட்ட தேதியில் எந்த முன்னணி நடிகைகளும் ப்ரியாக இல்லாததால், வேறு வழியில்லாமல் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்த ரிச்சாவை கமிட் பண்ணினார்.

ஆனால் அதன்பிறகு மார்க்கெட் இல்லாத ரிச்சா ராசியில்லாத நடிகையும்கூட என்று செண்டிமென்டாக பீல் பண்ணியவர், இடையில் ஹன்சிகாவுககும் நூல் விட்டுப்பார்த்தார். ஆனால் அவரோ அடுத்த ஆண்டு இறுதி வரை கால்சீட் இல்லை என்று மறுத்து விட்டாராம். இந்த சேதியறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டாராம் ரிச்சா. என்றாலும் ஹன்சிகா கால்சீட் கொடுக்காததால், அப்பாடா தப்பித்தோம் என்று இருந்து வந்திருக்கிறார்.

ஆனால் இப்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை ரிச்சாவை படப்பிடிப்புக்கு அழைக்கவில்லையாம். அதனால் அடுத்தபடியாகவும் வேறு யாரேனும் நடிகையை தேடுகிறார்களோ என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் பிரியாணி படக்குழுவில் நடப்பது குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார் ரிச்சா.


இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும்.

எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும்.



பின்னர் உங்களுடைய மின்னஞ்சலை திறந்து எமது தளத்திலிருந்து வந்திருக்கும் Link ஐ click செய்து Active செய்து கொண்டு எமது பதிவுகளை இலவசமாக பெற்று கொள்ளுங்கள்.

If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

0 comments:

Translate

Link To My Website

Followers

Archives

Related Posts Plugin for WordPress, Blogger...

Subscribe

Recommend on Google
Powered by Blogger.